தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 7) 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு
தமிழகம் முழுவதும் நாளை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மாநிலம் முழுதும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், நேரடி வகுப்புகள் நடந்து வந்தன.

தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்றுவரும் நிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 7-ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பெரும்பாலான பள்ளிகள் வாக்குச்சாவடிகளாகவும், பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணிகளுக்கு சென்றுள்ளதால், நாளை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக சட்டசபை தேர்தல் முடிந்ததும், வரும் 8ம் தேதி முதல், மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகளை நடத்த, பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்தது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3ம் தேதி பொது தேர்வு துவங்க உள்ளதால், அதற்கு முன் மாணவர்களுக்கு இரண்டாவது ஆயத்த தேர்வுகளை நடத்தவும், ஆய்வக பயிற்சிக்கான செய்முறை தேர்வுகளை ஏப்ரலில் நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments