கோபாலப்பட்டிணத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் 59.06% வாக்குபதிவு!புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 06/04/2021 செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணியளவில் துவங்கி மாலை 7.00 மணி வரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

கோபாலப்பட்டிணத்தில் 1867 ஆண் வாக்காளர்கள், 1934 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 3801 வாக்காளர்கள் உள்ளனர்.

கோபாலப்பட்டிணத்தில் காலை 7 மணி முதலே சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

பகல் 1 மணிக்கு மேல் வாக்குப்பதிவு திடீரென மந்தமானது. கோடை வெயில் கொழுத்தியதால், வாக்காளர்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

இந்நிலையில் வெயில் சற்று குறைந்தும், வாக்குப்பதிவு நேரம் இறுதியில் வாக்குச்சாவடிகளில் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. வாக்காளர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

ஆண்கள், பெண்கள் தனித் தனியாக நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்..

2021 சட்டமன்ற தேர்தலில் கோபாலப்பட்டிணத்தில் பதிவான வாக்கு விபரம் :

கோபாலப்பட்டிணத்தில் மொத்தம் 3801 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1867 பேரும்,பெண்கள் 1934 பேரும் அடங்குவர்.

கோபாலப்பட்டிணம் வாக்குச்சாவடியில் மொத்தம் 2245(59.06%) வாக்குகள் பதிவாகியது. இதில் ஆண்கள் 972(25.57%) வாக்குகளும், பெண்கள் 1273(33.49%) வாக்குகளும் செலுத்தினர்.

வார்டு வாரியாக விபரம்:

பாகம் எண் 146

மொத்த வாக்குகள் எண்ணிக்கை: 1039

ஆண்கள் - 540, பெண்கள் - 499

பதிவான வாக்குகள் எண்ணிக்கை: 603(58.03%)

ஆண்கள்-259(24.93%), பெண்கள்-344(33.10%)

பாகம் எண் 147

மொத்தம் வாக்குகள் எண்ணிக்கை: 873

ஆண்கள் - 411
பெண்கள் - 462

பதிவான வாக்குகள் எண்ணிக்கை:506 (57.96%)

ஆண்கள்- 216(24.74%), பெண்கள்- 290 (33.22%)
 
பாகம் எண் 148

மொத்தம் வாக்குகள் எண்ணிக்கை: 1029

ஆண்கள்- 511,பெண்கள்- 518

பதிவான வாக்குகள் எண்ணிக்கை: 607(58.99%)

ஆண்கள்- 269(26.14%), பெண்கள்- 338(32.85%)

பாகம் எண் 149

மொத்தம் வாக்குகள் எண்ணிக்கை:860 

ஆண்கள்- 405,பெண்கள்- 455

பதிவான வாக்குகள் 
எண்ணிக்கை: 529(61.51%)

ஆண்கள்- 228(26.51%), பெண்கள்- 301(35.00%)

2019 கோபாலப்பட்டிணத்தில் நாடாளுமன்ற தேர்தல் 58.84% வாக்குபதிவு!


2020 கோபாலப்பட்டிணத்தில் உள்ளாட்சி தேர்தலில் 56.74% வாக்குபதிவு!


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments