அதிராம்பட்டினத்தில் இருந்து சென்னை சென்ற தனியார் ஆம்னி பேருந்து விபத்து !

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இருந்து சென்ற தனியார் ஆம்னி பேருந்து சூரப்பள்ளம் அருகே சென்ற போது நிலை தடுமாறி காட்டாற்றுக்குள் விழுந்தது. ஆற்றில் தண்ணீர் ஏதும் இல்லாததால் அதிக சேதாரமின்றி தடுக்கப்பட்டது.

இதில் பயணித்த அதிரையை சேர்ந்த ஜாசிக், பட்டுக்கோட்டையை சேர்ந்த ஜோதிமணி, ஜெஸ்வந்தி, நிவேதா லெட்சத்தோப்பு நதியா ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்களை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பேருந்து மெதுவாக சென்ற நேரத்தில் இவ்விபத்து நேரிட்டதால் லேசான காயங்களுடன் உயிர்ப்பலி ஏதுமில்லாமல் தவிர்க்கப்பட்டது. இவ்விபத்து குறித்து பட்டுக்கோட்டை தாலுக்கா காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments