தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்பு இளைஞர்களும் நடுத்தர வயதினரும் கவனிக்க!
பொதுவாக, நாட்டில் இளம் வயதினரும் நடுத்தர வயதினரும்தான் ரத்த தானம் செய்ய முன்வருவார்கள். இப்போது மே ஒன்றாம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட இருக்கிறார்கள். தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு 70 நாட்களுக்கு ரத்த தானம் செய்ய முடியாது. நாடு முழுவதிலும் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக இந்தத் தடுப்பூசித் திட்டம் செயல்பட இருப்பதால் ரத்த வங்கிகளுக்கு அடுத்த 2-3 மாதங்களுக்கு ரத்தம் கிடைப்பது குறைந்துவிடும். அப்போது உயிர் காக்கும் சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் ரத்தம் கிடைக்காமல் போய்விடும். அதனால், தகுதியான ரத்தக் கொடையாளர்கள் அனைவரும் - 18 முதல் 45 வயது வரை

உள்ளவர்கள் - முதலில் ரத்ததானம் செய்துவிட்டு, அடுத்ததாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால், இந்த நிலைமையைச் சமாளிக்க முடியும்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments