முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ரூ.1,03,900 ஒப்படைப்பு!தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு தங்கு தடையின்றி சிகிச்சை அளிக்கவும், ஆக்சிஜன் போன்றவை வாங்கவும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நிதியளிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள்,பொதுமக்கள், திரைப்பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் நிதி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தமிழக அரசுக்கு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் வேண்டுகோளுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ரூ.1,03,900 மாநில ஜமாஅத்துல் உலமா சபையிடம் ஒப்படைத்தனர்.

தகவல்: மொளவி,ஹாஃபிழ் S.A.ஜாஃபர் அலி உலவி, (செயலாளர் புதுகை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை),தலைமை இமாம் பெரிய பள்ளிவாசல், ஜெகதாபட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments