குறைந்த அழுத்த மின்சாரம்: நாகுடி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட களக்குடி கிராம மக்கள்!கட்டுமாவடி அருகே நாகுடி அடுத்துள்ள களக்குடியில் கடந்த மூன்று வருடங்களாக அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குறைந்த அழுத்த மின்சாரம் வருவதால் வீட்டு உபயோக பொருட்களான டி.வி., மிக்சி, பிரிஜ், கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு வந்தன.

இதுகுறித்து பலமுறை மின்சார வாரிய அலுவலகத்திலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த களக்குடி பகுதி பொதுமக்கள் நாகுடி துணை மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து மின்சார வாரிய பொறியாளர், முற்றுகையிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments