கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்: கலெக்டர் உமாமகேஸ்வரி வேண்டுகோள்!கருப்புப் பூஞ்சை நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் ஒரு சிலர் முயூகோர்மைக்கோஸிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய் தாக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும்போது ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொண்டவர்கள், சர்க்கரை நோய் பாதிப்பு கட்டுப்பாட்டிலில்லாதவர்கள், எச்.ஐ.வி. போன்ற வைரஸ் தொற்று மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிப்புக்குள்ளாவார்கள். 

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்ணிலும் கண்ணை சுற்றிலும் கடுமையான வலி, காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சுத்திணறல், ரத்த வாந்தி, மனச்சிதைவு போன்ற அறிகுறிகள் ஏற்படும். எனவே கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களுக்கு மேற்கொண்ட நோய் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டாலும் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு விரைந்து சென்று உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments