திருமண பத்திரிகையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இ-பதிவு சான்றிதழ் பெற முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஒரு திருமண நிகழ்ச்சிக்கு ஒரு இ-பதிவு சான்றிதழ் மட்டுமே பதிய முடியும். ஒரு திருமணத்திற்கான இ-பதிவில் பத்திரிகையில் உள்ள அனைவரின் விவரங்களை குறிப்பிட வேண்டும்.
பிற மாவட்டங்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கான இ-பதிவு முறையில் மாற்றம் செய்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமண பத்திரிகையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இ-பதிவு சான்றிதழை பெற முடியும்.
அந்தவகையில், மணமகள், மணமகன், தாய், தந்தை, போன்றோரே இ-பதிவு செய்ய முடியும். இ-பதிவின்போது திருமண அழைப்பிதழை கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒரு திருமண நிகழ்ச்சிக்கு, ஒரு இ-பதிவு சான்றிதழ் மட்டுமே பதிய முடியும். ஒரு திருமணத்திற்கான இ-பதிவில் பத்திரிகையில் உள்ள அனைவரின் விவரங்களை குறிப்பிட வேண்டும்.
அனைத்து வண்டிகளின் எண்கள், ஓட்டுநர் பெயர், கைபேசி எண் பதிவிட வேண்டும். அதேபோல், பயணிக்கும் ஒவ்வொருவருடைய பெயர், ஏதேனும் ஒரு அடையாள அட்டையும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போலி திருமண பத்திரிகையை தயார் செய்தால் நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, திருமணங்களுக்கு செல்ல இ-பதிவு முறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பல இடங்களில் விதிமுறைகள் மீறப்பட்டதால் இ-பதிவு பக்கத்தில் விருப்பத்தேர்வில் திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டது. பின்னர் மீண்டும் சில விதிமுறைகளுடன் இன்று சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் படி புதிய விதிமுறைகள்
திருமண நிகழ்விற்கு வரும் அனைவருக்கும் சேர்த்து ஒரு பதிவு மட்டுமே செய்ய வேண்டும்
மணமகன், மணமகள், தாய், தந்தை என இவர்களில் ஒருவர் மட்டுமே இ - பதிவு செய்யவேண்டும்
இ - பதிவை மேற்கொள்ளும் விண்ணப்பதாரரின் பெயர் மணமகன், மணமகள், தாய், தந்தை பெயர் திருமண அழைப்பிதழில் இருக்க வேண்டும்
திருமண பத்திரிகையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இ-பதிவு சான்றிதழை பெற முடியும்.
இ - பதிவின் போது திருமண அழைப்பிதழை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தவறான தகவல் அளித்து ஒரு நிகழ்வுக்கு அதிகமுறை இ - பதிவு செய்தால் சிவில், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்
திருமண நிகழ்வுக்கு வரும் அனைவருக்கும் சேர்த்து ஒரே இ-பதிவு
விழாவில் பங்கேற்பவர்களின் அனைத்து வாகனங்களும் ஒரே இ-பதிவில் குறிப்பிட வேண்டும்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.