வெளியானது புதிய அமைச்சரவை பட்டியல்… எந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்த துறை… இதோ முழு லிஸ்ட்…!!





 
34 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டது . புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கிறது.
 
தமிழக சட்டமன்ற தேர்தலில் 159 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் 125 இடங்களில் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதுதவிர, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சிகளின் கணக்கையும் சேர்த்தால் தி.மு.கவின் பலம் 133 ஆக உள்ளது. இதையடுத்து நாளை 34 பேர் கொண்ட புதிய அமைச்சரவையுடம் மு.க.ஸ்டாலின் நாளை ஆளுநர் மாளிகையில் மிக எளிமையாக பதவியேற்கிறார்.
 
புதிய அமைச்சரவைக்கான பட்டியலை கவர்னரின் பார்வைக்கு மு.க.ஸ்டாலின் அனுப்பியதையடுத்து அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் பெயர் பட்டியல் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியாகியுள்ளது. அதன்படி

நாளை முதல்வராகப் பதவி ஏற்கும் ஸ்டாலினுடன் 33 அமைச்சர்கள் பொறுப்பேற்க உள்ளனர். 2 பெண்கள், 2 சிறுபான்மையினர் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளனர். நிதி அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும், சுகாதாரத் துறை அமைச்சராக மா.சுப்பிரமணியனும் பொறுப்பேற்க உள்ளனர்.

1. ஸ்டாலின் - முதல்வர் (பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, , மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் துறை, சிறப்பு முயற்சி, சிறப்பு திட்ட செயலாக்கம் மாற்றுத் திறனாளிகள் நலன்)

2. துரைமுருகன் - நீர்வளத்துறை அமைச்சர்

3. கே.என்.நேரு - நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்

4. பெரியசாமி - கூட்டுறவுத்துறை அமைச்சர்

5. பொன்முடி - உயர்கல்வித்துறை அமைச்சர்

6. எ.வ.வேலு - பொதுப்பணித்துறை அமைச்சர்

7. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - வேளாண்மைத் துறை அமைச்சர்
8. கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் - வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்

9. தங்கம் தென்னரசு - தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி, தொல்லியல் துறை அமைச்சர்

10. எஸ்.ரகுபதி - சட்டத்துறை அமைச்சர்

11. முத்துசாமி - வீட்டுவசதித்துறை அமைச்சர்

12. பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்

13. தா.மோ.அன்பரசன் - ஊரக தொழில்துறை அமைச்சர்

14. சாமிநாதன் - செய்தி, விளம்பரத்துறை அமைச்சர்

15. கீதாஜீவன் - சமூக நலன், மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர்

16. அனிதா ராதாகிருஷ்ணன் - மீன் வளம், மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்.

17. ராஜகண்ணப்பன் - போக்குவரத்துத் துறை அமைச்சர்

18. ராமச்சந்திரன் - வனத்துறை அமைச்சர்

19. சக்ரபாணி - உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்

20. செந்தில் பாலாஜி = மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்

21. ஆர்.காந்தி - கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்

22. சுப்பிரமணியன் - மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர்

23. பி.மூர்த்தி - வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

24. எஸ்.எஸ்.சிவசங்கர்- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்

25. பழனிவேல் தியாகராஜன்- நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை

26. ஆவடி நாசர் - பால்வளத்துறை அமைச்சர்

27. செஞ்சி மஸ்தான் - சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்

28. அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

29. மெய்யநாதன் - சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்

30. சிவி கணேசன் - தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்

31. மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்

32. மதிவேந்தன் - சுற்றுலாத்துறை அமைச்சர்

33. கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்

34. சேகர் பாபு - இந்துசமய அறநிலையத்துறை








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments