தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள் வெளிநாடு செல்ல சவுதி அரேபியா அனுமதிசவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு வருட காலமாக சர்வதேச பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சவூதி அரேபிய குடிமக்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல அந்நாடு தடை விதித்திருந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த தடை அமலுக்கு வந்தது. 

இந்த நிலையில், தற்போது தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 3 கோடி மக்கள்தொகை கொண்ட சவூதியில் சுமாா் 1.1 கோடி பேருக்கு குறைந்தது ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தப்பட்டுவிட்டது.  

இதைத் தொடா்ந்து, தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் வெளிநாடு பயணம் மேற்கொள்ள அந்நாடு அனுமதி அளித்துள்ளது. முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சவுதி அரேபியா குடிமக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அதேபோல், வெளிநாட்டு பயணிகள் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால்,தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments