கோபாலப்பட்டிணத்தில் குளிர்வித்த கோடை மழை!






வளிமண்டல சுழற்சி காரணமாக, குமரி, நெல்லை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பில், தமிழகத்தில் 14ஆம் தேதிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, மதுரை, புதுக்கோட்டை தென்காசி, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சுட்டெரித்த வெயிலால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய போது லேசாக மழை பெய்தது. இருப்பினும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல்  அருகே உள்ள கடற்கரை கிராமமான கோபாலப்பட்டிணத்தில் இன்று மே 11 2021 அதிகாலை 5:30 மணி முதல் காலை 10 மணி வரை விட்டு விட்டு லேசான தூரல் மழை பெய்தது. நண்பகல் 12  மணிக்கு மேல் வானில் திடீரென கருமேகங்கள் திரண்டன. 

ஒரு வாரத்திற்கு மேலாக வெயிலால் அவதி அடைந்து வந்த மக்கள் பெய்த லேசான தூறல் மழையால்  குளிர்ந்த காற்று வீசியதால்  குழந்தைகள் வயதானவர்கள்  மற்றும்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மழையால் கோபாலப்பட்டிணத்தில் அவ்வப்போது கரு மேகங்கள் சூழ்ந்து  மலைப்பிரதேசம் போல அதிகமான குளிர் நிலவி வருகிறது.










எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments