புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை படுக்கை விவரம் அறிய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்: கலெக்டர் தகவல்!!புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள படுக்கை விவரம் குறித்த தகவல்களை கேட்டறிய 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவமனைகளில் காலியாகவுள்ள படுக்கை விவரம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தேவையான தகவல்கள் வழங்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் பொதுமக்கள் 04322-1077, 04322-222207 என்ற தொலைபேசி எண்ணிலும், 75388 84840 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments