திருச்சி டூ மாலத்தீவு: 16 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கிய விமான சேவை




வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக சிறப்பு விமானங்கள் கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதன் முறையாக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மாலத்தீவில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 146 பயணிகளுடன் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தை வரவேற்கும் விதமாக திருச்சி விமான நிலையம் சார்பாக 2 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டு, வருகை புரிந்த பயணிகளை விமான நிலைய ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதையடுத்து திருச்சியிலிருந்து மாலத்தீவுக்கு மாலத்தீவில் இருந்து திருச்சிக்கும் தொடர்ந்து விமான சேவையை அளிக்க வேண்டும் என்று டெல்டா பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments