எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மாணவர்கள் பெயர் பட்டியலை திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு - அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல்

 
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மாணவர்கள் பெயர் பட்டியலை அரசு தேர்வுகள் இயக்ககம் இணையதளத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம்.

2020-21-ம் கல்வியாண்டு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 படித்த மாணவர்களின் பெயர் பட்டியலை அரசு தேர்வுகள் இயக்ககம் இணையதளத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம். 

வருகிற 14-ந்தேதி (நாளை மறுதினம்) முதல் 17-ந்தேதி (வியாழக்கிழமை) வரை திருத்தம் செய்து கொள்ள முடியும். திருத்தங்களை அந்தந்த உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இந்த திருத்தங்களை மேற்கொள்ள இதுவே இறுதி வாய்ப்பு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவல் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10, 11-ம் வகுப்பு முடித்துள்ள மாணவர்கள் தங்கள் பெயர்ப்பட்டியலில் ஏதும் திருத்தம் இருப்பின், வரும் 14 - 17-ம் தேதிக்குள்ளாக https://apply1.tndge.org/login என்ற இணையதளத்தில், பள்ளி அளவில் வழங்கப்பட்டுள்ள கடவுச்சொல்லை (Password) பயன்படுத்தி திருத்திக்கொள்ளலாம் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments