கோபாலப்பட்டிணம் ரஹ்மானிய்யா மதரஸா ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா அழைப்பு!



புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டிணத்தில் அமைந்துள்ள ரஹ்மானிய்யா குர்ஆன் மதரஸா மற்றும் ரஹ்மானிய்யா பெண்கள் மதரஸாவின் ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா மற்றும் மாணவர்களுக்கான போட்டிகள் என முப்பெரும் விழாக்கள் வரும் பிப்ரவரி 12 முதல் 14-ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளன.

தொடக்க விழா நிகழ்ச்சிகள் (12.02.2026)
வியாழக்கிழமை காலை 8:00 மணிக்கு கோபாலப்பட்டிணம் முகையத்தீன் ஆண்டவர் ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் விழா தொடங்குகிறது. இதில் குர்ஆன் மதரஸா மாணவ, மாணவியர்களின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். அன்று இஷா தொழுகைக்குப்பின் முகைதீன் ஆண்டவர் ஜூம்ஆ பள்ளிவாசலில் மதரஸாவின் முன்னாள், இந்நாள் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், மதரஸாவின் வளர்ச்சிக்காக உடலாலும், பொருளாலும் உதவி செய்தவர்கள், செய்து கொண்டு இருப்பவர்கள் அனைவருடைய ஹக்கிலும் துஆ செய்யப்படும். மஜ்லிஸில் அனைவரும் கலந்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பட்டமளிப்பு விழா (13.02.2026)
வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிக்கு பட்டமளிப்பு விழா கோபாலப்பட்டிணம் முகையத்தீன் ஆண்டவர் ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெறுகிறது. ஹாஜி SRMI. ஷேக்பரீத் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், கோபாலப்பட்டிணம் ஜமாஅத் தலைவர் ஹாஜி R.S.M.முகமது அன்சாரி ஜனாப். R.M.A.நைனா முகம்மது, துணைத்தலைவர்,ஜனாப்.R.அப்துல் காதர், துணைத்தலைவர், ஹாஜி.S.முகம்மது இப்ராஹீம், செயலாளர், ஜனாப்.S.செய்யது முகம்மது, துணைச்செயலாளர், ஜனாப்.A. அலி அக்பர், துணைச்செயலாளர், ஹாஜி. M. பசீர் அலி, பொருளாளர், மௌலானா மௌலவி. N.M.A. இக்பால் பாகவி, மதரஸா கமிட்டியாளர்,ஜனாப்.M.சித்திக் அலி அன்சாரி, மதரஸா கமிட்டியாளர், மௌலானா மௌலவி. S. ஜகுபர் சாதிக் முனீரி, மதரஸா கமிட்டியாளர், மௌலவி.ஹாஃபிழ்.R.ஷாஹூல் ஹமீது அல்குத்ஸி, மதரஸா கமிட்டியாளர், மௌலவி ஹாஃபிழ், A.ரியாழ் முஹம்மது அல்குத்ஸி, மதரஸா கமிட்டியாளர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.மௌலவி.ஹாஃபிழ்.R.ஷாஹூல் ஹமீது வரவேற்புரையாற்ற, மௌலானா மௌலவி.J. உஸ்மான் அலி கிராஅத் ஓதி விழாவைத் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியினைப் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி ஹாஃபிழ் அப்துல்லா மிஸ்பாஹி அவர்கள் தொகுத்து வழங்குவார்.

காயல்பட்டினம் முஅஸ்கர் ரஹ்மான் பெண்கள் அரபிக்கல்லூரி நிறுவனர் மௌலானா மௌலவி H.A. அஹ்மது அப்துல் காதர் ஆலிம் மஹ்ழரி அவர்கள் சிறப்பு பேருரை ஆற்றி, மாணவிகளுக்கு சனதுகளை (பட்டங்கள்) வழங்குகிறார். இவ்விழாவில், 12 மாணவிகளுக்கு ஆலிமா பட்டமும், 23 மாணவிகளுக்கு காரீஆ பட்டமும், 10 மாணவிகளுக்கு ஹாஃபிழா ஸகீரா சான்றிதழும் வழங்கப்பட உள்ளன.வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு, ஹிஃப்ழு மதரஸா மாணவர்களுக்கான வினாடி-வினா (Quiz) போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெறும். 

பெண்கள் நிகழ்ச்சி
இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 14 (சனிக்கிழமை) காலை 8:00 மணிக்கு ரஹ்மானிய்யா பெண்கள் மதரஸா, நூருல் அய்ன் வளாகத்தில் பெண்களுக்கான தனிச் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

புதிய மாணவர் சேர்க்கை
வருகின்ற 2026-2027 கல்வி ஆண்டிற்கான ஆலிமா, காரீஆ மற்றும் ஹாஃபிழா ஸகீரா ஆகிய பாடத்திட்டங்களுக்கான புதிய மாணவியர் சேர்க்கை (Admission), ரமலான் மாதம் முதல் தொடங்கும் என்று மதரஸா நிர்வாகம் அறிவித்துள்ளது.

நிர்வாகிகள் அழைப்பு
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோபாலப்பட்டிணம் சுன்னத் வல்ஜமாஅத் நிர்வாகிகள், மதரஸா கமிட்டியாளர்கள் மற்றும் ஜமாஅத் பொதுமக்கள் சிறப்பான முறையில் செய்து வருகின்றனர். இவ்விழாவில் ஊர் பொதுமக்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு நிர்வாகத் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments