தமிழக முதல்வரிடம் கொரோனா நிவாரண நிதியாக ரூ.24,20,110 அளித்த ஜமா அத்துல் உலமா சபை!தலைமை செயலகத்தில் நேற்று 01.06.2021 தமிழக முதல்வரிடம் கொரோனா நிவாரண நிதியாக ரூ.24,20,110 (இருபத்து நான்கு இலட்சத்து இருபது ஆயிரத்து நூற்றி பத்து) ரூபாய்க்கான காசோலை ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் வழங்கப்பட்டது.

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட இந்தப்பணம் மிகச்சாதாரண மாத ஊதியத்தில் பணியாற்றும் கண்ணியமிக்க ஆலிம்களிடமிருந்து மட்டுமே பெறப்பட்டது என்று ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் முதல்வரிடம் எடுத்துரைத்தார்.

மனிதாபிமானத்துடன் வழங்கப்பட்ட இந்நிதிக்கான  காசோலையை முதல்வர் ஸ்டாலின் அவர்கள்  மிகுந்த நன்றியுடன் பெற்றுக்கொண்டார்.

தகவல் ‌.
மௌலவி.S.A.ஜாஃபர் அலி உலவி
செயலாளர்,புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.
தலைமை இமாம்,பெரியபள்ளிவாசல்,ஜெகதாப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments