சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தும் பாஜக மோடி அரசை கண்டித்து புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட SDPI கட்சியினர் போராட்டம்!சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தும் பாஜக மோடி அரசை கண்டித்து ஜூன் 01 செவ்வாய்கிழமை காலை 10 மணி முதல் வீடுகள் தோறும்  புதுக்கோட்டை கிழக்கு  மாவட்ட SDPI கட்சியினர் பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு பெருந்துன்பத்தில் தவித்துக் கொண்டிருக்கும் பெருந்தொற்றுக்கு நடுவே, தனது மோசமான ஆட்சி நிர்வாகத்தால் நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டு நிற்கும் மோடி அரசு, அதனை திசைதிருப்பும் வகையில், சிஏஏ எனும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தங்களின் ஆட்சி நிர்வாகத் தோல்வியை மறைக்க குடியுரிமை போன்ற சர்ச்சைக்குரிய விசயங்களை தூண்டும் மோடி அரசு இந்த அபத்தமான நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறது, இதனை கண்டித்து ஜூன் 01 அன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைமை அழைப்பு விடுத்தது.

அதன்படி புதுக்கோட்டை கிழக்கு  மாவட்ட SDPI கட்சியினர் தங்களின் கிளைகளில் உள்ள பகுதிகளில் கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர்கள் கைகளில் CAA எதிர்ப்பு பதாகை ஏந்தி CAA சட்டத்தை அமல்படுத்தும் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.தகவல்:
சமூக ஊடகத்துறை
SDPI கட்சி  
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments