லட்சத்தீவு மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்து கோபலப்பட்டிணம் கிளை தவ்ஹீத் ஜமாத் இணையவழி போராட்டம்


TNTJ கோபலப்பட்டிணம் கிளை சார்பாக லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாக நடைப்பெற்ற இணையவழி போராட்டம் நடைபெற்றது.

லட்சத்தீவு மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்து மாபெரும் இணையவழி போராட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை அறிவித்திருந்தது. 

அதன் அடிப்படையில் நேற்று 1/6/2021 செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக நேற்று காலை 11 மணியளவில் இணையவழி போராட்டம் நடைபெற்றது.

இந்த இணையவழி போராட்டத்தில் கிளை தலைவர் அப்துல் ரசாக் செயலாளர் செய்யது இபுராஹிம் பொருளாளர் மஹாதீர் முகமது துணை செயலாளர் முகமது முனாஸ் மற்றும் தொண்டரணி முகம்மது ஹூசைன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாக பதாகைகள் ஏந்தி இணையவழி போராட்டம் நடைபெற்றது.

லட்சத்தீவின் மக்களுக்காக
லட்சக்கணக்காய் குரல் எழுப்புவோம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கோபாலப்படட்டிணம் கிளை,
புதுக்கோட்டை மாவட்டம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments