கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த வெளிநாடுவாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!தமிழகத்தில் ஜனவரி 16ம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன்பின் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்:

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு...

கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காகவும் மற்றும் புதிய விசாவில் வெளிநாட்டிற்கு செல்ல இருப்பீர்கள்.உங்களுக்கு மத்திய அரசு சலுகை அளித்துள்ளது. 

தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸ் போட்ட பிறகு இரண்டாவது டோஸ் 84 நாட்கள் கழித்து தான் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெளிநாடு செல்வோருக்கு முதல் டோஸ் போட்ட பிறகு அடுத்த டோஸ் 28 நாட்கள் கழித்து போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு அண்மையில் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் வெளிநாடு செல்பவர்களுக்கு முதல் டோஸ் போட்டு 28 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் போடப்படும் என மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் கோபாலப்பட்டிணம் மற்றும் கோட்டைபட்டிணத்தை சேர்ந்த வெளிநாட்டில் பணிபுரியும் இளைஞர்கள் ஏராளமானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

கொரோனா தடுப்பூசி போட செல்பவர்கள்:

வெளிநாடுகளுக்கு செல்லக் கூடியவர்கள் தங்களது பாஸ்போர்ட்டை எடுத்து செல்ல வேண்டும்.

தடுப்பூசி முகாமுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்லவும்.

தடுப்பூசி முகாமில் கண்டிப்பாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும்.

கொரோனா என்னும் இந்தக் கொடிய வைரஸ் நோய் தொற்று வராமல் இருக்க முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி இருந்து கொள்ளுங்கள். மக்கள் அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியே வருவதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments