ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில்பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயற்சி
ஆவுடையார்கோவில் அருகே தீயத்தூர் கிராமத்தில் ஒரு பிரிவினர் பாதையை அடைத்து விட்டதாகவும், நடுக்குடியிருப்பை சேர்ந்த மற்றொரு பிரிவினர் பாதை கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய பிரிவு மாநில துணை செயலாளர் கண்ணன் தலைமையில் கட்சியின் முக்கிய பிரமுகர் மற்றும் 25 குடும்பங்களை சேர்ந்த ஆண்கள், பெண்களும் ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசீலன், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் சாலையில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தாசில்தார் அலுவலகத்தின் அருகில் அமர்ந்து  அங்கேயே பால் காய்ச்சினர். இதையறிந்த அறந்தாங்கி கோட்டாட்சியர் (பொறுப்பு) அக்பர் அலி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைையயடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments