தொண்டியில் பஸ் டெப்போ வருமா? மக்கள் கோரிக்கை
தொண்டியில் போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டியை மையமாக வைத்து 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் போதிய போக்குவரத்து வசதியின்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். திருவாடானை உள்ளிட்ட பகுதிகளில் பஸ் கிடைக்காமல் இரவு முழுவதும் காத்திருக்க வேண்டியுள்ளது. கடந்த பல வருடங்களாக தொண்டியை மையமாக வைத்து போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், அதிகாரிகள் ஆய்வு செய்து, இடம் தேர்வு செய்வதும் , அதன்பின் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்படுவதும் தொடர் கதையாக உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதியில் போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என தொண்டி திமுக சார்பில் எம்எல்ஏ கரு.மாணிக்கம் மற்றும் அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக நகர செயலாளர் இஸ்மத் நானா கூறுகையில், தொண்டியில் போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தொண்டியை மையமாக வைத்து பணிமனை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments