கோபாலப்பட்டிணம் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து புதிய நிர்வாகத்தை தேர்வு செய்ய முன்னெடுத்திருக்கும் செயல்பாடு குறித்து வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் உங்களின் கருத்து!கோபாலப்பட்டிணம் இளைஞர்கள் ஒன்றிணைந்து கடந்த 9.07.2021 அன்று ஜுமுஆ தொழுகைக்கு பிறகு பெரியபள்ளிவாசல் வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் பழைய ஜமாத் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதனடிப்படையில் புதிய நபர்களை கொண்டு புதிய நிர்வாகத்தை தேர்வு செய்ய 10 பேர் கொண்ட குழு உருவாக்கி திறமையான புதிய நபர்களை கண்டறிந்து வருகிற 16.07.2021 வெள்ளிக்கிழமை ஜுமுஆ-விற்கு பிறகு ஊர் பொதுமக்கள் முன்னிலையில் ஊரில் உள்ள சிறந்த தகுதி வாய்ந்த நபர்களை தெரியப்படுத்தும் முயற்சியில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இந்த 10 பேர்  கொண்ட குழு குறித்தும் மற்றும் புதிய நிர்வாகம் தேர்வு செய்வது குறித்தும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள கோபாலப்பட்டிணம் மண்ணின் மைந்தர்கள் தங்களுடைய மேலான  கருத்துக்களை பதிவு செய்யுங்கள்... 


உங்களுடைய கருத்துக்களை வருகின்ற 15.07.2021 (வியாழக்கிழமை) இந்திய நேரப்படி இரவு 10.00 மணிக்குள் தங்களுக்கு கிடைக்கப்பெற்றிருக்கும்  கூகுள் படிவத்தில் (Google forms) தவறாமல் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்கின்றோம்.

இப்படிக்கு...
10 பேர் கொண்ட குழு,
கோபாலப்பட்டிணம்

பதிவு செய்ய வேண்டிய விபரம்:எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments