கீரமங்கலம் அருகே மலேசியாவில் படித்த குழந்தைகள் அரசு பள்ளியில் சேர்ப்பு!கீரமங்கலம் அருகே உள்ள செரியலூர் இனாம் ஊராட்சி காதர்முகைதீன் நகரை சேர்ந்தவர் பசீர்அலி (வயது 60).

இவர் காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக உள்ளார். இவரது மகன் அராபாத் மலேசியாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

அவர்களது குழந்தைகளும் மலேசியாவில் படித்து வந்தனர். தற்போது மருமகள் மற்றும் குழந்தைகள் சொந்த ஊருக்கு வந்துள்ள நிலையில் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்கும்முயற்சியில் மருமகள் ஈடுபட்டார். ஆனால் பசீர்அலி குழந்தைகளை அரசுப் பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சேர்க்க சென்றனர். 

திருவரங்குளம் வட்டாரக்கல்வி அலுவலர் புவனேஸ்வரி மலர்விழி அவர்களை பாராட்டி சேர்க்கை விண்ணப்பம் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை செந்தில்வடிவு மாணவிகளை பள்ளியில் சேர்த்துக் கொண்டார். இதே போல அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments