வங்கி கணக்கில் நூதன முறையில் பண மோசடியா? தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்சைபர் கிரைம் போலீசார் அறிவிப்பு
வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் மோசடி செய்யப்பட்டால் தொலைபேசி எண்ணில் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவித்துள்ளனர்.

மோசடி புகார்கள்
சமீபகாலமாக இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருகிறது. வங்கியில் இருந்து பேசுவதாக கூறி வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். எண், ரகசிய குறியீடு எண் உள்ளிட்ட விவரங்களை மர்மநபர்கள் பெற்று அதன்மூலம் இணைய வழியாக அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை மோசடி செய்து விடுகின்றனர். 

இதில் பல லட்சம் ரூபாய் வரை பணத்தை எடுத்து விடுகின்றனர். இது தொடர்பாக புகார்கள் தமிழகத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையங்களுக்கு அதிகம் வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்திலும் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் இதுபோன்ற புகார்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.
தொலைபேசி எண்
இந்த நிலையில் இதுபோன்ற மோசடியில் மர்மநபர்கள் ஈடுபட்டால் உடனடியாக 155260 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும்படி சைபர் கிரைம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த எண்ணை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தால், மோசடி நபர்களின் வங்கி கணக்கு மாற்றப்பட்ட பணம் எடுக்க முடியாமல் உடனடியாக தடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த இலவச தொலைபேசி எண் குறித்து தற்போது பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி யார் பேசினாலும், தங்களது வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு எண், ரகசிய குறியீடு எண் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments