இந்தியா-UAE இடையே மறு அறிவிப்பு வரும் வரை விமானங்கள் ரத்து - எமிரேட்ஸ் நிறுவனம் அறிவிப்பு!!



இந்தியா-அமீரகம் இடையே மறு அறிவிப்பு வரும் வரை விமான சேவை ரத்து செய்யப்படுவதாக நேற்று எமிரேட்ஸ் விமான நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த ஏப்ரல் மாதம் முதல் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக தேசிய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்திருந்தது. இதில் இந்தியா மட்டுமல்லாமல் பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்தும் அந்நாடுகளின் விமான நிறுவனங்கள் வருகிற 21-ந் தேதி வரை விமான சேவை அமீரகத்திற்கு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் துபாயின் எமிரேட்ஸ் விமான நிறுவனம் வருகிற 7-ந் தேதி முதல் இந்தியாவில் இருந்து துபாய்க்கு விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதில் எமிரேட்ஸ் நிறுவனத்தின் இணையதளத்திலும் வருகிற 7-ந் தேதி முதல் இந்தியாவில் இருந்து துபாய் வருவதற்கான டிக்கெட் முன்பதிவுக்கான வசதி செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து, அந்த நிறுவனத்திற்கு பலர் டுவிட்டரில் கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்த அந்த நிறுவனம் வரும் 7-ந் தேதி முதல் இந்தியாவில் இருந்து துபாய்க்கு விமான சேவை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். அதற்கான பயண கட்டுப்பாடுகள் மற்றும் அரசுத்துறைகளிடம் இருந்து பெறப்படும் அனுமதி ஆகியவற்றுக்கு காத்திருக்கிறோம் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

இதில் பலர் மீண்டும் துபாய் திரும்பி விடலாம் என மகிழ்ச்சியுடன் இருந்தனர். இந்த நிலையில் நேற்று எமிரேட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அறிவிப்பு விடப்பட்டது. அந்த அறிவிப்பில் எமிரேட்ஸ் நிறுவனத்தின் இந்தியாவில் இருந்து வருகை புரிவதற்கான அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்தியா வழியாக 14 நாட்களுக்கு முன் வருகை தரும் எந்த பயணிக்கும் அமீரகத்திற்கு வருகை புரிய அனுமதி இல்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், விமான சேவை ரத்தானது தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments