ஆவுடையார்கோவிலில் நாளை ஆக.02 மாபெரும் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்!ஆவுடையார்கோவிலில் நாளை 02.08.2021 மாபெரும் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் நாளை 2/8/2020 திங்கட்கிழமை ஆவுடையார்கோவில் யூனியன் ஆபீஸ் எதிர்ப்புறம் உள்ள அபிராமி மஹாலில் திருப்பெருந்துறை ஊராட்சி மன்றம் சார்பில் அனைத்து வயதினருக்குமான மாபெரும் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் காலை 9 மணி முதல் சுமார் 1000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 

தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக திருப்பெருந்துறை ஊராட்சி மன்றம் சார்பாக இலவச பழமரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.

ஆவுடையார்கோவில் பகுதிகளில் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத பொதுமக்கள், வணிகர்கள், அரசுப் பணியாளர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி திரளாக கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள திருப்பெருந்துறை ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments