கோபாலப்பட்டிணத்தில் ஒரு மாதமாக இருள் சூழ்ந்து காணப்படும் காட்டுக்குளம்-மீமிசல் சாலை! கண்டுகொள்ளாத ஊராட்சி மன்ற தலைவி!!கோபாலப்பட்டிணத்தில் ஒரு மாதமாக காலமாக காட்டுக்குளம்-மீமிசல் சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. ஊராட்சி மன்ற தலைவி மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் பகுதி மக்கள் மீமிசல் செல்வதற்கு காட்டுகுளம் சாலையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் காட்டுகுளம் பகுதி மக்கள் மீமிசல் சென்று வருவதற்கு முக்கிய சாலையாக திகழ்ந்து வருகிறது. இந்த சாலையில் உள்ள தெருவிளக்கு கடந்த ஒரு மாதமாக எரியாமல் இந்த தெருவே இருளில் மூழ்கி உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் இதுநாள் வரைக்கும் தெரு விளக்கு எரிய எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதுகுறித்து வார்டு உறுப்பினரிடம் கேட்டபோது கூறியதாவது, காட்டுகுளம் சாலையில் தெருவிளக்கு எரியவில்லை என சமூக ஆர்வலர் என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்தார். இதுகுறித்து உடனடியாக ஊராட்சி மன்ற தலைவி மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அதனடிப்படையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் இது வரைக்கும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறினார்.

மேலும் தெரு விளக்கு எரியவில்லை என புகார் அளித்த சமூக ஆர்வலர் கூறியதாவது, முதலில் தெருவிளக்கு எரியவில்லை என வார்டு உறுப்பினர் கவனத்திற்கு கொண்டு சென்றேன். பிறகு ஊராட்சி மன்ற தலைவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.ஆனால் தொலைபேசியை ஊராட்சி மன்ற தலைவி எடுக்கவில்லை. இதையடுத்து ஊராட்சி மன்ற செயலாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். இணைப்பில் வந்த செயலாளரிடம் எரியாத தெருவிளக்கு குறித்து புகார் அளித்தேன். இதுகுறித்து ஊராட்சி மன்ற செயலாளர் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். எனவே சரி செய்யப்படாத காரணத்தால் மீண்டும் ஊராட்சி மன்ற தலைவியின் தொலைபேசி எண்ணிற்கு முயற்சித்ததில் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் போனை எடுத்தார். தெரு விளக்கு எரியவில்லை என புகார் கூறினேன். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். சில நாட்கள் சென்றது ஆனால் தெருவிளக்கு எரிய எந்த வித நடவடிக்கையும் ஊராட்சி மன்ற தலைவி எடுக்கவில்லை. பிறகு மீண்டும் ஊராட்சி மன்ற செயலாளரை தொடர்பு கொண்டேன். 

இதுகுறித்து ஊராட்சி மன்ற செயலாளர் கூறுகையில் தெருவிளக்கு சரி செய்வது ஊராட்சி மன்ற தலைவியின் வேலை என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதனையடுத்து மீண்டும் ஊராட்சி மன்ற தலைவியின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டேன். ஆனால் திரும்பவும் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் தான் போனை எடுத்தார். உடனே இதுவரைக்கும் தெருவிளக்கு சரி செய்யப்படவில்லையே என கேட்டேன். அதற்கு நீங்கள் மாற்று பாதையான ரைஸ்மில் வழியாக சுற்றி செல்லுங்கள் என்று எப்படியோ போங்கள் என்ற அடிப்படையில் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இந்த அதிரடி பதில் நடவடிக்கையால் ஒரு நிமிடம் திணறி போய்விட்டேன் என கூறி வேதனை அடைந்தார்.

இதையடுத்து ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை அறிந்து கொண்டு மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக ஊராட்சி மன்ற தலைவிக்கு GPM மீடியா சார்பில் ஊராட்சி மன்ற தலைவியின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டோம். ஆனால் போனை எடுக்கவில்லை. பலமுறை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  
ஆக நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவியின் செயல்பாடு போற்றும் படி இல்லை.கணவர் தலையீடு அதிகமாகவே காணப்படுவதாலோ என்னவோ தெரியவில்லை....??

 எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 
எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments