10ம் வகுப்பு மதிப்பெண் சான்று…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!




10ம் வகுப்பு மதிப்பெண் சான்று…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!


பதிவு நாள் :August 19, 2021 
 
பத்தாம் வகுப்பிற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வு இயக்குனர் உஷாராணி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: “பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்குப் பிறந்த தேதி, தேர்வெண் ஆகியவற்றை அவர்கள் பயின்ற பள்ளியில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக வரும் எனவும் இந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் http://dge.tn.gov.in இணையதளத்தில் பிறந்த தேதி, பதிவு எண்ணை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments