சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான யூசிமாஸ் (UC MAS) அபாகஸ் போட்டியில், பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று மாநில அளவில் பல்வேறு இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கடந்த ஓராண்டாகத் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வந்த பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திறம்படப் போட்டியிட்டுப் பின்வரும் தரவரிசைகளைக் கைப்பற்றினர்:
A.ஹாஜரா
மாநில அளவில்
4-ஆம் இடம்
4-ஆம் இடம்
Y.ஆபிக் அகமது
மாநில அளவில்
5-ஆம் இடம்
5-ஆம் இடம்
M.முகமது ரிஃபான்
மாநில அளவில்
5-ஆம் இடம்
5-ஆம் இடம்
A.அஃப்ரா பாத்திமா
மாநில அளவில்
6-ஆம் இடம்
6-ஆம் இடம்
மாநில அளவில் சாதனை படைத்து பள்ளிக்கும், கோபாலப்பட்டிணம் மண்ணிற்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கும், அவர்களை ஊக்கப்படுத்திப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் திரளான வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கோபாலப்பட்டிணம் மண்ணிற்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கும், அவர்களை
ஊக்கப்படுத்திப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், பள்ளி
நிர்வாகத்திற்கும் GPM மீடியா சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளும், பாரட்டுக்களையும் தெரிவித்துகொள்கின்றோம்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.