கிருஷ்ணாஜிபட்டினம் தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்ற இம்முகாமிற்கு, TNTJ மாவட்ட துணைச் செயலாளர் சைபுல் கரீம் தலைமை தாங்கினார். அறந்தாங்கி அரசு மருத்துவமனை இரத்த வங்கி குழுவினருடன் இணைந்து இந்த முகாம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் M.M.நைனா முகமது, செயலாளர் சல்மான்கான், பொருளாளர் ஹாசன் நூருதீன், துணைத் தலைவர் ஷாஜகான், துணைச் செயலாளர் ஹஜ் முகமது மற்றும் மாணவரணி பொறுப்பாளர் ஹாரூன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் செய்ய முன்வந்தனர். இதில் மருத்துவத் தகுதி பரிசோதனைகளுக்குப் பிறகு, தகுதியுடைய கொடையாளர்களிடமிருந்து 33 யூனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனை இரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது.
இரத்ததானம் செய்த கொடையாளர்கள் அனைவருக்கும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை மருத்துவர் Dr. காளிமுத்து சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.
நிகழ்வின் நிறைவாக மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் சபியுல்லா நன்றி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "ஒரு மனிதனை வாழ வைத்தவர், உலக மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவரைப் போன்றவர்" என்ற திருக்குர்ஆனின் உயரிய போதனையை அடிப்படையாகக் கொண்டு சமுதாய நலன் கருதி இந்த இரத்ததான முகாம் கட்டமைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இம்முகாம் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த மருத்துவர் Dr. காளிமுத்து தலைமையிலான மருத்துவக் குழுவினருக்கும், இரத்தக் கொடையாளர்களுக்கும், முகாம் ஏற்பாடுகளை முன்னெடுத்த கிளை நிர்வாகிகள், மாணவரணி, தொண்டரணி உறுப்பினர்களுக்கும் அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.