கோபாலப்பட்டிணத்தில் என்றும் உதவும் கரங்கள் நடத்திய பெண்களுக்கான சமூக விழிப்புணர்வு அரங்கக்கூட்டம்

கோபாலப்பட்டிணத்தில் என்றும் உதவும் கரங்கள் பெண்களுக்கான சமூக விழிப்புணர்வு அரங்கக்கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணத்தில் என்றும் உதவும் கரங்கள் சார்பாக பெண்களுக்கான சமூக விழிப்புணர்வு அரங்கக்கூட்டம் கோபாலப்பட்டிணம் தங்கமஹால் திருமண மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை 24.09.2021 மாலை 4 மணியளவில் நடைபெற்றது .

இதில் சிறப்புரை சகோதரி சபரிமாலா சமூக செயற்பாட்டாளர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் .முன்னதாக சகோதரி சபரிமாலா அவர்களுக்கு என்றும் உதவும் கரங்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கபட்டது.

இந்த விழாவில் கோபாலப்பட்டிணம் பெண்கள் தாய்மார்கள் ,ஆண்கள், ஜமாஅத் நிர்வாகிகள் , சமூக ஆர்வலர்கள்  கலந்து கொண்டனர் .இந்த விழாவை என்றும் உதவும் கரங்கள் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments