பெருநாவலூர் அரசு கல்லூரியில் மாணவர்களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு 23, 24-ந் தேதிகளில் நடக்கிறது



  



 
        ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 2026-27-ம் கல்வியாண்டிற்கான இளங்கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர்வதற்காக www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகிற 23, 24-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் 23-ந் தேதி பி.எஸ்சி. கணினி அறிவியல், இயற்பியல் மற்றும் கணிதவியல் ஆகிய அறிவியல் பாடங்களுக்கான கலந்தாய்வும், 24-ந் தேதி பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.காம்., வணிகவியல், பி.பி.ஏ., நிர்வாகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வும் நடைபெறும். மேற்குறிப்பிட்ட கலந்தாய்வுகள் அனைத்தும் குறிப்பிட்ட தேதிகளில் காலை 10 மணி முதல் தொடங்கி நடைபெறும். இக்கலந்தாய்வில் அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, அவரவர்களுக்கு உரிய செல்போன் எண்களுக்கு, கல்லூரியில் இருந்து குறுஞ்செய்தி வரப்பெற்றவர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். மேலும் கலந்தாய்வுக்கு வருகை தரும் மாணவர்கள் தங்களின் இணைய தள விண்ணப்ப படிவத்துடன், தங்களின் 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிழ், ஆதார் அட்டை, பள்ளி மாற்றுச்சான்றிதழ், வருமானச்சான்று, சாதி சான்று, புகைப்படங்கள்-5, வங்கிக்கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களின் அசல்கள் மற்றும் 5 நகல்களையும் எடுத்து வரவேண்டும் என்று கல்லூரி முதல்வர் துரை தெரிவித்துள்ளார்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments