பெண்ணிடம் நூதன முறையில் 10 பவுன் நகை திருட்டு




பெண்ணிடம் நூதன முறையில் 10 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி கலிபுல்லா நகரை சேர்ந்தவர் முகமது இத்ரீஸ். இவரது மனைவி நசீரா பானு (வயது 28). இவர் சிவகங்கை மாவட்டம் கண்டனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி கே.புதுப்பட்டிக்கு பஸ்சில் நின்று கொண்டு சென்று கொண்டிருந்தார். இவரது அருகில் உட்கார்ந்து இருந்த பெண் ஒருவர் பையை கொடுங்கள் நான் வைத்திருக்கிறேன் என கேட்டு வாங்கி உள்ளார். பின்னர் கீழாநிலைக்கோட்டை பஸ்நிறுத்தம் வந்ததும் அந்த பெண், நசீமா பானுவிடம் பையை கொடுத்து விட்டு இறங்கி சென்றுவிட்டார். 

நசீமாபானு கே.புதுப்பட்டி வந்து இறங்கி பையை திறந்து பார்த்தபோது பையில் வைத்திருந்த பர்ஸ் காணவில்லை. அதில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ.7 ஆயிரமும் காணவில்லை. இது தொடர்பாக நசீமா பானு கொடுத்த புகாரின் பேரில் கே. புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்துடன் தப்பி ஓடிய பெண்ணை தேடி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments