புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கிய கலெக்டர் கவிதாராமு!புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற தேர்வான 11 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் தேர்வு செய்யப்பட்ட 11 ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் ரொக்கப்பரிசு தலா ரூ.10 ஆயிரத்தை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். 

அப்போது அவர் கூறுகையில், ஆசிரியர் பணி அறப்பணியாகும்.பள்ளிகளில் பயிலும் ஒவ்வொரு மாணவரின் சிறப்பான எதிர்காலத்திற்கு ஆசிரியர்களே முக்கிய காரணமாக திகழ்கின்றனர். 

இத்தகைய பல்வேறு சிறப்புகளை பெற்ற ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களுக்காக தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துக்கள் என்றார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், திராவிடச்செல்வம், சண்முகநாதன், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments