பாரத் பந்த்: விவசாயிகளுக்கு ஆதரவாக மீமிசலில் எஸ்டிபிஐ கட்சியினர் சாலை மறியல்!டெல்லியில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் மீமிசலில் எஸ்டிபிஐ கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லியில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் எஸ்டிபிஐ கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக மீமிசல் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டம் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் M.M.ஹனிபா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில் கட்சியின் மாவட்ட தலைவர் U.செய்யது அகமது மற்றும் அறந்தாங்கி தெற்கு தொகுதி தலைவர் மகிழ்ச்சி யாசின் அவர்களும் கண்டன உரையாற்றினர்.அதன் பின்னர் மீமிசல் பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். 
     
தகவல்:
சமூக ஊடக அணி,
எஸ்டிபிஐ கட்சி,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments