RTI மனுவிற்கு உரிய பதில் அளிக்காவிடில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை! ஊராட்சி உதவி இயக்குனருக்கு தகவல் ஆணையம் எச்சரிக்கை!!



ஆர்டிஐ மனுவிற்கு உரிய பதில் அளிக்காவிடில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனருக்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் கோட்டப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை அளிக்க கோரி திருச்சி மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், வட்டார வளர்ச்சி அலுவலர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க எந்த அலுவலரிடம் மனு அளிக்க வேண்டும். கோட்டபாளையம் ஊராட்சியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் அதிகாரியின் பெயர் மற்றும் மேல்முறையீடு அதிகாரி பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட 20 தலைப்புகளில் தகவல்களை கோரியுள்ளார்.

இந்த மனுவிற்கு பொது தகவல் அலுவலர் தகவல் ஏதும் வழங்காததால் கடந்த ஏப்ரல் மாதம், மேல்முறையீட்டு அலுவலர் மற்றும் உதவி இயக்குனர் ஊராட்சிகள், கலெக்டர் அலுவலக வளாகம், திருச்சி என்ற முகவரியில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவிற்கு மேல்முறையீட்டு அலுவலர் உரிய பதில் வழங்கவில்லை. எனவே தான் கோரிய தகவல்களை தனக்கு வழங்க உத்தரவிடுமாறு கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு தகவல் ஆணையத் தில் 2வது மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனுவானது கடந்த 15ம் தேதி மாநில தகவல் ஆணையர் தமிழ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. ஊரடங்கு காரணமாக நேரடி விசாரணை இல்லாமல் போன் வாயிலாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின்போது மேல்முறையீட்டாளர் மணிகண்டன் மற்றும் பொது தகவல் அலுவலர் ஆகியோர் பங்கேற்றனர்.

தகவல் பெறும் உரிமை சட்டம் பிரிவு 2005 பிரிவு 6(1)ன் கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் கோரியுள்ள தகவல்களை பொதுத் தகவல் அலுவலர் அளிக்க தவறும் பட்சத்தில் அவர் மீது தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 20(1) மற்றும் 20(2) கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையம் எச்சரிக்கின்றது.

அப்போது மேல்முறையீட்டாளர் மணிகண்டன் தான் கோரிய தகவல்களுக்கு பொது தகவல் அலுவலர் உரிய சான்றொப்பமிட்டு முழுமையான தகவல்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பொது தகவல் அலுலர், மேல்முறையீட்டாளர் கோரிய தகவல்களை ஆணையம் உத்தரவிடும்பட்சத்தில் உரிய சான்றொப்பமிட்டு வழங்குவதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட ஆணையர், மேல்முறையிட்டாளருக்கு பொதுத் தகவல் அலுவலர் முறையான தகவல்களை வழங்கவில்லை என்று என்பது விசாரணையில் தெரிய வருகிறது என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது மேல்முறையிட்டாளர் கடந்த 21.12.2020-ம் தேதியிட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6(1) ன் கீழ் கோரியுள்ள தகவல்களை அனைத்துப் பக்கங்களிலும் உரிய சான்றொப்பமிட்டு முழுமையான தகவல்களை இவ்வாணை கிடைக்கப்ப பெற்ற ஓரு வாரத்திற்குள் சட்டப்பிரிவு 7(6) கீழ் கட்டணமின்றி ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் மேல்முறையீட்டாளருக்கு அனுப்பி வைத்து மேல் முறையீட்டாளர் பெற்றுக் கொண்ட ஒப்புகை அட்டையுடன் தகவல் மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட தகவலின் நகலினை இணைத்து ஒரு அறிக்கையாக தயாரித்து ஆணையத்திற்கு பதிவஞ்சல் வாயிலாக அனுப்பிவைக்குமாறு பொதுத்து தகவல் அலுவலருக்கு ஆணையம் உத்தரவிடுகிறது.

அவ்வாறு மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமை சட்டம் பிரிவு 2005 பிரிவு 6(1)ன் கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் கோரியுள்ள தகவல்களை பொதுத் தகவல் அலுவலர் அளிக்க தவறும்பட்சத்தில் அவர் மீது தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 20(1) மற்றும் 20(2) கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையம் எச்சரிக்கின்றது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments