இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு: 7.9% பேர் சிறார்கள் என ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்




இந்தியாவில் புற்றுநோயாளிகளில் 7.9 சதவிகிதம் பேர் 14 வயதிற்குட்பட்ட சிறார்கள் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது

தேசிய புற்றுநோய் பதிவேடு திட்டத்தின் படி இத்தகவல் தெரியவந்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 96 மருத்துவமனைகளில் புதிதாக பதிவு செய்யப்பட்ட 6 லட்சத்து 10 ஆயிரம் புற்றுநோயாளிகளில் 7.9 சதவிகிதம் பேர் 14 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் என்று தெரியவந்துள்ளது.

புற்றுநோயாளிகளில் 48.7 சதவிகிதம் பேர் புகையிலை பொருட்கள் பயன்பாடு காரணமாக மட்டும் பாதிக்கப்பட்டதாகவும் அப்பதிவேடு கூறுகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் தேசிய நோய் தகவல் ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் இவை தெரியவந்துள்ளன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments