1-ந் தேதி பள்ளிகள் திறப்பு; கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்!



கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக 9-ம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து வருகிற 1-ந் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையொட்டி பள்ளி நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சிறப்பு கூட்டங்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை தயார்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சி மன்றம் சார்பில் நூறு நாள் பணியாளர்களை கொண்டு வகுப்பறைகள் மற்றும் வெளிப்புறத்தில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments