கோபாலப்பட்டிணத்தில் கொரனோ தடுப்பூசி செலுத்தியவர்கள் யார் ? செலுத்தாதவர்கள் யார் ? வீடு, வீடாக கணக்கெடுப்பு பணி தீவிரம்!






புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல்  கோபாலப்பட்டிணத்தில் கொரனோ தடுப்பூசி செலுத்தியவர்கள் யார் ? செலுத்தாதவர்கள்  யார்? என்று வீடு, வீடாக  கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோபாலப்பட்டிணத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக கோபாலப்பட்டிணத்தில் இன்று அக்டோபர் 27  புதன் கிழமை முதல்  பொதுமக்கள் வீடுகளுக்குச் சென்று  தடுப்பூசி அனைவரும் போட்டு உள்ளாா்களா அப்படி என்றால் போட்டவா்கள் எத்தனை போ், தடுப்பூசி போடாதவா்கள் எத்தனை போ் என்ற விவரங்களை சேகரித்து வருகின்றனா். மேலும் வீட்டில் 45 வயதுக்கு மேல் எத்தனை போ், 18 வயதுக்குள் எத்தனை போ் உள்ளனா் என்பது குறித்து கணக்கெடுத்து வருகின்றனா்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கணக்கெடுக்க வரும்பொழுது உங்கள் வீட்டில் உள்ள அனைவரின் ஆதார் அட்டையையும் கொடுத்து பரிசோதித்து கொள்ள ஒத்துழைப்பு தரும்படி கோபாலப்பட்டிணம் முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments