அம்மாபட்டினம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததை கண்டித்து சாலை மறியல்!



காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று அம்மாபட்டினம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை மற்றும் குறைகளை எடுத்து கூற பொதுமக்கள் கூடியிருந்தனர். ஆனால், கிராம சபை கூட்டத்திற்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை எனக் கூறி கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது நேற்று நடக்க வேண்டிய கிராம சபை கூட்டம் வேறு தேதிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. 

இதனையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments