கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் மின் கம்பி அறுந்து விழுந்ததுகோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் மின் கம்பி அறுந்து விழுந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசலை அடுத்த கோபாலப்பட்டிணம்  அவுலியா நகர் பள்ளிவாசல் அருகில் காய்ந்த தென்னை மட்டை  விழுந்து மின் கம்பி இன்று 28/10/2021 வியாழக்கிழமை நண்பகல் சுமார் 12:15 மணியளவில் அறுந்து விழுந்தது. மேலும் மின் கம்பி அறுந்து விழும் நேரத்தில் அருகில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

இதையடுத்து பொதுமக்கள் மின்வாரிய ஊழியரிடம் தகவல் தெரிவித்தனர்.இதனால் அந்த பகுதிக்கு செல்லும் மின்சாரம் உடனடியாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அறுந்து விழுந்த மின்கம்பி சரி செய்யப்பட்டு இன்னும் சில மணி நேரங்களில் அந்த பகுதிக்கு மின்சாரம் வழங்கப்படும் என மின் வாரிய ஊழியர் தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments