கோட்டைப்பட்டினம் முஸ்லீம் ஜமாத் மற்றும் ஆட்டு இறைச்சி விற்பனையாளர்கள் ஆலோசனை கூட்டம்!



கோட்டைப்பட்டினம் முஸ்லீம் ஜமாத் மற்றும் அனைத்து ஆட்டு இறைச்சி விற்பனையாளர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோட்டைப்பட்டினம் முஸ்லீம் ஜமாத் மற்றும் அனைத்து ஆட்டு இறைச்சி விற்பனையாளர்களின் ஆலோசனை கூட்டம் 25-10-2021 (திங்கள் கிழமை) கோட்டைப்பட்டினம் பெரியபள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது,

  1. ஆட்டு இறைச்சி கடைகளில் ஆடு அறுப்பதற்கு கோட்டைப்பட்டினம் முஸ்லீம் ஜமாத் நிர்வாகத்தில் ஊழியராக பணி செய்யும் அப்துல்லா என்பவரை ஆடு அறுப்பதற்கு நியமணம் செய்து பணி அமர்த்துவது என்றும்.
  2. ஆட்டு இறைச்சி கடை நடத்துபவர்கள் வெளியூர்களிலிருந்து ஆட்டை அறுத்து இறைச்சியாக வியாபாரம் செய்வதற்கு கோட்டைப்பட்டினத்திற்குள் கொண்டு வரக்கூடாது என்றும்.
  3. ஆட்டு இறைச்சி கடை நடத்துபவர்கள் ஜமாத் நிர்வாகத்தின் மூலமாக நியமிக்கப்பட்ட ஊழியரை வைத்து பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி அறுக்க வேண்டும் என்றும்.
  4. ஆட்டு இறைச்சி கடைகளை, ஜமாத் நிர்வாகத்தின் மூலம் ஒரு குழு அமைத்து கண்காணிப்பது என்றும்.
  5. மேற்கண்ட அனைத்து தீர்மாணங்களையும் மதித்து பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்ப்படுத்தும் வகையில் நடந்துகொள்வது என்றும்.
  6. ஆட்டு இறைச்சி கடை உரிமையாளர்கள் மேற்கண்ட தீர்மானங்களை அலட்சியப்படுத்தினால் கோட்டைப்பட்டினம் முஸ்லீம் ஜமாத் நிர்வாகம் புதுக்கோட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரியப்படுத்திகிறோம்.

இப்படிக்கு
முஸ்லீம் ஜமாத் நிர்வாகம் (வக்ஃப்)
கோட்டைப்பட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments