போக்குவரத்து வசதி இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு அரசு சார்பில் ஆட்டோ வசதி




ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் சார்பில், புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், காரசூராம்பட்டி குடியிருப்பு பகுதியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பாக பரம்பூர் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வர போக்குவரத்து வசதி திட்ட தொடக்க விழா காரசூராம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கான ஆட்டோ வசதியை பரம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராமமூர்த்தி தொடங்கி வைத்து பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலையில் பள்ளி வசதி இல்லாத அன்னவாசல் ஒன்றியத்தைச் சேர்ந்த காரசூராம்பட்டி குடியிருப்பு பகுதியில் உள்ள 9 குழந்தைகள் பாதுகாப்பாக பரம்பூர் பள்ளி சென்றுவர போக்குவரத்து வசதி நிதி் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது அந்த நிதி ஒரு மாணவருக்கு மாதம் ரூ.600 வீதம் 5 மாதங்களுக்கு வழங்கப்படும். இந்த நிதியைக் கொண்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கு முறையான உரிமம் பெற்ற ஆட்டோ, வேன் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். இதில் வட்டார வளமைய பயிற்றுனர்கள், பரம்பூர் பள்ளி ஆசிரியர்கள், பரம்பூர், காரசூராம்பட்டி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments