புதுகை அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற நவ.20 தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!புதுக்கோட்டை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) வாயிலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்கிட படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயன்பெறும் வகையில்

புதுக்கோட்டை, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) (KKC College) மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் 20.11.2021 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய இளைஞர்கள் உரிய மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை (Ration Card), புகைப்படம் மற்றும் தொழிற் பயிற்சி தொடர்பான சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளவும். 

தனியார் தொழில் நிறுவனங்களும் பங்கு பெற்று இளைஞர்களை வேலைக்கு தேர்வு செய்து கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட வேலை வாய்ப்பு வழங்கிடும் பொருட்டு அனைத்து தனியார் தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெற்று இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments