6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – நூலக வார விழா போட்டிகள்! நாளை தொடங்கி 20-ந் தேதி வரை நடக்கிறது!!புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் 54-வது தேசிய நூலக வார விழா போட்டிகள் மாவட்ட மைய நூலகத்தில் நடத்தப்படுகிறது.

இதனை முன்னிட்டு மாணவர்களுக்கும், வாசகர்களுக்கும் நாளை (14-ந் தேதி) முதல் 20-ந் தேதி வரை பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி நாளை 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய ஓவியம் வரைதல் போட்டி நடைபெறுகிறது. 

16-ந் தேதி 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு, `பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்' என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடைபெறுகிறது. 

18-ந் தேதி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு, `என்னை செதுக்கிய புத்தகம்' பற்றிய கட்டுரைப்போட்டி நடைபெறும். 

20-ந் தேதி வாசகர்களுக்கு படம் பார்த்து கதை, கவிதை மற்றும் கட்டுரை எழுதும் போட்டி நடைபெறுகிறது. 

இந்த போட்டிகளில் முதல் 3 இடங்களை பெறுபவர்களுக்கு தேசிய நூலக வார நிறைவு விழாவில் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை புதுக்கோட்டை மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் சசிகலா தெரிவித்துள்ளார்.

இது குறித்த மேலும் விவரங்களுக்கு 04322-243484, 9443532633 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments