கனடாவில் வருகிற 30-ந்தேதி முதல் ‘கோவேக்சின்’ தடுப்பூசி போட்டவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் இந்தியன் வைராலஜி நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக ‘கோவாக்சின்’ என்கிற தடுப்பூசியை கண்டுபிடித்தன.
அதே போல் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரஜெனகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியை இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தியாவில் தற்போது இந்த 2 தடுப்பூசிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.
இவற்றில் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு பல நாடுகள் அனுமதியளித்தன, உலக சுகாதார அமைப்பும் அனுமதியளித்து. ஆனால், முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்சின்’ தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்காமல் இருந்து வந்தது.
இதனால் உலக நாடுகள் பலவும் ‘கோவேக்சின்’ தடுப்பூசி போட்டவர்களை, தடுப்பூசி போடாதவர்களாகவே கருதி தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்தன. இந்த சூழலில் நீண்ட இழுபறிக்கு பின்னர் இந்த மாத தொடக்கத்தில் ‘கோவேக்சின்’ தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியது.
இதை தொடர்ந்து, ‘கோவேக்சின்’ தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்டவர்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு பல நாடுகள் அனுமதி அளித்து வருகின்றன.
அந்த வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக்கொண்ட நபர்கள் வருகிற 30-ந்தேதி கனடாவுக்கு வரலாம் என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.இதுவரை அமெரிக்காவின் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் மற்றும் இங்கிலாந்தின் ஆஸ்ட்ரஜெனகா ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே கனடாவில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் கோவேக்சின் தடுப்பூசிக்கு கனடா அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. கோவாக்சின் தவிர சீனாவில் உருவாக்கப்பட்ட சினோவாக் மற்றும் சினோபார்ம் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கும் கனடா அனுமதி அளித்துள்ளது.
அதன்படி கோவேக்சின், சினோவாக் மற்றும் சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக்கொண்ட நபர்கள் வருகிற 30-ந்தேதி முதல் கனடாவில் அனுமதிக்கப்படுவார்கள்.
நேற்று வரை கனடாவில் 17 லட்சத்து 62 ஆயிரத்து 434 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 29 ஆயிரத்து 481 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.