புதுகை மாவட்டத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்!புதுக்கோட்டை மாவட்டத்தில் 10-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 539 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் பொதுமக்களுக்கு கொரோனா முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி 95 ஆயிரத்து 54 எண்ணிக்கையில் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்மாபெரும் தடுப்பூசி முகாமை சிறப்பாக நடத்தும் வகையில் அனைத்து துறைகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.18 வயதிற்கு மேற்பட்டோர் இம்முகாம்களை பயன்படுத்தி முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் இம்முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இம்முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருபவர்கள் 18 வயதிற்கு மேற்பட்டோர், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் அடையாள அட்டை, பான் கார்டு, ஓய்வூதிய புத்தகம், குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்ற அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

எனவே இம்முகாம்களை பொதுமக்கள் தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இனிவரும் நாட்களில் வாரம்தோறும் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments