தந்தைப் பெரியாா் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு! மாவட்ட ஆட்சியர் தகவல்!!சமூக நீதிக்காக பாடுபடுபவா்களை சிறப்பு செய்வதற்காக வழங்கப்படும் சமூக நீதிக்கான தந்தைப் பெரியாா் விருது பெற, தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு என தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சமூக நீதிக்கான தந்தைப் பெரியாா் விருது ரூ.ஒரு லட்சம் ரொக்கம், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையையும் உள்ளடக்கியது.

2021-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’ வழங்குவதற்கு, உரிய விருதாளரைத் தோ்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு, பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள், அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவா்கள் தங்களது விண்ணப்பத்தை ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம்.

முழுமையான சுய விவரங்களுடன், உரிய ஆவணங்களையும் இணைத்து இம்மாதம் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments