முதல்வர் மு.க.ஸ்டாலின் தாய்மார்களின் மூத்த பிள்ளையாக சுழன்று பணிசெய்கிறார்: அறந்தாங்கி எம்.எல்.ஏ ராமசந்திரன் பெருமிதம்!புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி  மக்களிடம் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றுக்கொண்டு  முதல்வர் மு.க.ஸ்டாலின் தாய்மார்களின் மூத்த பிள்ளையாக சுழன்று பணிசெய்கிறார் என அறந்தாங்கி எம்.எல்.ஏ ராமசந்திரன் பெருமிதத்தோடு பேசினார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக வெற்றிபெற செய்த மக்களை தேடி நன்றி சொல்ல முடியவில்லை ஆனாலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கிராமங்கள் மற்றும் நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் திட்டமிட்டு நடத்தி வருகிறோம். 
அதன் தொடர்ச்சியாக அறந்தாங்கி நகராட்சியின் 4,5 மற்றும் 6ம் வார்டு மக்களை சந்தித்து குறைதீர் மனுக்களை பெறுகிறோம். மக்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேற்ற முயற்சி செய்வோம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாய்மார்களின் மூத்த பிள்ளையாக சுழன்று பணிசெய்கிறார் என பேசினார். 
இந்த குறைதீர் கூட்டத்தில் திமுக நகர செயலாளர் இரா.ஆனந்த், முன்னாள் திமுக நிர்வாகிகள்  செயலாளர் ராஜேந்திரன். முன்னாள் சேர்மன் மாரியப்பன், அன்பழகன், முன்னாள் கவுன்சிலர்கள் முத்து, காசிநாதன், ராமசாமி,  சுப்பையா, கழக பேச்சாளர் செல்வம், வர்த்தக சங்க தலைவர் காமராஜ், மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் ராஜ்குமார், சந்திரமோகன், கருப்பையா, குமரேசன், பன்னீர்செல்வம், மங்களம் கனி, மனிதநேய ஜனநாயக கட்சி முனைவர் முபாரக் அலி, காங்கிரஸ் கட்சி நகர தலைவர் வீராசாமி, மாநில ஊடக பிரிவு கிருபாகரன், பஷிர் அலி, மாவட் கவுன்சிலர் சுப்ரமனியன், வட்டார தலைவர்கள் முத்து, முருகன், நகர துணைத் தலைவர் கரத்தே யோகேஸ்வர்ன், நகர பொதுச் செயலாளர் முரளி, மோகன், அறந்தாங்கி வருவாய் ஆய்வாளர் செந்தில் குமார், வட்டாச்சியர் காமராஜர், நகராட்சி ஆணையர் திருட்செல்வம் சுகாதார ஆய்வாளர் சேகர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments