புதுகை மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய நாளை மறுநாள் கடைசிநாள்! விடுமுறை நாட்களில் காப்பீடு செய்ய சிறப்பு ஏற்பாடு!!புதுகை மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய நாளை மறுநாள் கடைசி நாளாகும் என (ஆர்.பி.எம்.எப்.பி.ஒய்.) திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது;- 2021-2022 ரபி பருவத்திற்கு பயிர்க்காப்பீடு செய்வதற்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கடைசி நாளாகும் என (ஆர்.பி.எம்.எப்.பி.ஒய்.) திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விவசாயிகள் எவ்வித சிரமமும் இன்றி பயிர்க்காப்பீடு செய்திட ஏதுவாக புதுக்கோட்டை மண்டல கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும் விடுமுறை நாட்களான இன்றும்(சனிக்கிழமை), நாளையும்(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை செயல்படும். விவசாயிகள் இச்சேவையினை பயன்படுத்திக்கொண்டு 100 சதவீத பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments